Tuesday 24 September 2019

வர்ணனை பெண்ணுக்கும் வர்ணனை பிடிக்கும் ......

 தங்கமே என்று
தன்  மகளை கொஞ்சும்
தந்தையை பிடிக்கா மகளேது ?

கண்ணே என்றும் மணியே என்றும்
காதலியை கொஞ்சும்
காதலனை பிடிக்கா கன்னி ஏது ?

கரும்பென இன்னிக்குதுந்தன்
கைபட்ட சமையலால் பாகற்காய் எனும்
கணவனின் கொஞ்சலை பிடிக்காத மனைவி ஏது ?

அம்மாவுக்கு நிகர் யார் ? என்று
அன்போடு தலை கோதி முத்தமிடும்
தன் மகனை பிடிக்காத தாய் ஏது....?

வர்ணனையே ஒரு பெண்ணாய் மாறிடினும் - அவ்
வர்ணனை பெண்ணுக்கும்
வர்ணனை பிடிக்கும் ......


Tuesday 10 July 2018

அழகினத்தின் தெய்வமவள்.....

கொஞ்சும் மொழி நவிலும் கோவை இதழ் நங்கையவள்...சிற்றிடை நடமிட சிறு நடை பயிலும்  மெல்லிடையாள்...விழி யது மச்சமாய் ...விரும்புமிடமெல்லாம் சுழன்றாடும் .... முகமது கமலமென மதிதேடி வான் நோக்கும் .....பிழை அற்ற இழை போல..பின் கூந்தல் நிலம் வருடும் ....பரதம் பயின்ற ரதம் போன்று ..பின்னழகும் அபிநயிக்கும்...யாழ் இசையின் மென்மை யெனபால் பாதம் பார் வருடும் ....அழகெலாம் போர் தொடுக்கும் பேரழகு புதையலவள்அழகுக்கே அருள் கொடுக்கும் 
அழகினத்தின் தெய்வமவள்.....

Saturday 7 July 2018

கணினியுக மாதவி

என் விரல் தீண்டலால்
வித வித சுகம் தந்தாய். .
அன்பது தந்தாய்..
அறிவது உட்டியே
அசானாய் உதவினாய். .
அளவின்றி உரையாடும்
அன்பான நண்பனானாய்
கட்டிலிலும் என்னுடைய
கால் வாசி இரவை பங்கிட்டாய்
கோபமெனில் என்கையாலே
அடிபட்டு உடைபட்டாய்
தனிமை விரட்ட என்
கரமோடு சிறைபட்டாய்..
கணினி யுக மாதவியாய்
என் கையோடு தழுவும்...
"கைப்பேசி "யே
கலியுகத்தில் உன்னால்
பல "கண்ணகிகள்"
"கோவலனை " எதிர்பார்த்தபடி.....



Wednesday 17 February 2016

நன்றி காதலே .....!!!

சிறை உடைத்த நான் 
மகிழ்ச்சி யின் மனச்சிறையில்
புது மகிழ்ச்சி கண்ட புராதன நாட்கள்... 

நினைவுகள் என்னோடு 
நேசங்களை பகிர்ந்துகொண்டு 
பாசங்கள் பரிசளித்த காலங்கள் ..

நட்பு அன்போடு கலந்து 
உறவுகளை எனக்கு அறிமுகபடுத்திய 
உன்னத நாட்கள்... 

விண்ணளவு பாசப்பிணைப்பை 
என் இதயம் சுமந்து 
சுகம் கண்ட தருணங்கள் ...

உணவு முதல்  ஊசி வரை 
என் பாசத்துக்கும் அன்புக்கும் பாலமாகி 
நட்பிற்கு நங்கூரம் அமைத்த 
நளினமான சுகங்கள் ......

அன்பின் முற்றிய அடுத்த நிலை 
என் நட்புக்கும் உறவுக்கும் 
சொந்தங்களுக்கும் சூரிய வெப்ப 
வேலி போட்டு சுட்டெரித்த 
சூழ்நிலை சுவடுகள் .....

நிஜம் என்பது நேசத்தின் நிகழ்காலம் 
நேசம் நட்பின் கடந்த காலம் என்பதை 
என் மனக்கண் மறைந்து இருந்து பார்த்து 
பரிதவித்த ரணங்கள் .....

எல்லாம் காதலே ....!
நீ செய்த சூழ்ச்சி ...

உன் மன்மத அன்பால் 
மனங்களின் அன்புக்கு 
மரண வாசகம் எழுதி விட்டாய் ...

காதலுக்கு வேலி இல்லை. 
அனால்.... 
என் நட்பு என்னும் 
வேலிக்கு 
போலி என்று 
புகழ் மாலை சூட்டிய..
உன் புண்ணிய அன்புக்கு 
நன்றி காதலே .....!!!

Thursday 14 January 2016

தைப் பொங்கல்

தைப் பொங்கல்
"தை"யல் வந்தாள்
"தை"யல் வந்தாள்
தத்தை போலே
"தை"யல் வந்தாள்
"கதிர் "கொண்ட எழில் காட்டி
எதிர் புலர்ந்து இனிது வந்தாள்
"பச்சரிசிசிரிப்பு காட்டி
பக்குவமாய் படர்ந்து வந்தாள்
"கரும்புபோன்று சுவையாகி ....
விரும்பும் இனிப்பாய் விளங்கி வந்தாள் ..
"மஞ்சள்போல மங்கலமாய்
மங்கையவள் மலர்ந்து வந்தாள்
பொங்கிடும் எழில் கொஞ்ச
பொலிவுடனே பொங்கி வந்தாள்
வளம் பெருகும் வாழ்வும்
நலம் கொஞ்சும் ஆண்டும் தர
"தைஎன்னும் தையலவள்
"தைப் பொங்கலாய்தரணி வந்தாள்.

Friday 27 November 2015

வீழ்ச்சி ....

ஆயிரம் முறை
 மீட்கப்பட்ட பின்னும்
இன்னும் தவறி விழுந்து கொண்டுதான்
இருக்கிறேன் ....
உன் இதயம் என்னும்
பள்ளத்தில் ...

Saturday 7 November 2015

உன் தனையனாய் (என் தந்தை பற்றி ...)

எந்தன் வழிகாட்டியாய்
எந்தன் வாழ்வை
வசந்தமாக்கிய வாசமாய்
வந்தவன் நீயே ...

உன் கை தட்டலில்
தவழ்ந்து வந்து
உன் கால் பிடித்து எழுந்து
உன் சுண்டு விரல் பிடித்து
நடை பழகிய
என் கால்களும்...

உன் வயிறு சிம்மாசனம் ஏறி
மார்பின் முடி பிடுங்கி
முகம் முதல் முழுவதும்
நக கீறல் இட்ட
என் கரங்களும்

தவறிய மொழிகள் எல்லாம்
தத்தை மொழி என்று
ரசித்திட்ட உன் அன்பால்
தலைகனம் பிடித்த
என் வார்த்தைகளும்

தந்தையே ...
உன்னையே உலகாய்
எண்ணிக்கொண்டு இருக்கின்றன ..

என் தலை வகிடு முதல்
தாழ் பணியும் குணம் வரை
உன்னை பார்த்து
என்னில் உருவாகியவை தான்...

உன்  தோள் மீது
துள்ளி விளையாடிய
நினைவும் ...

கால் மீது
தொட்டில் ஆடிய
உறவும்
உனக்கு பதிலீடின்றி
பட்டினி கிடக்கின்றன ....

நீயே என் முழு உரு
நீதான் என் முதல் குரு ,...

உன் கோபங்களூடே
என்னை குணமுள்ளவனாக்கியது
உன் அன்பு ...

உன் அர்ச்சனை யை
என் அழகிய வாழ்வின்
ஆபர்ணமாய் சூடிக்கொண்டேன்

வேதனை கள் உன்னை
என்னில் இருந்து
வேறு படுத்திய போதும்

என்னை உலகத்தின் பார்வையில்
வேறு படுத்தியவன் நீ ....

தந்தையே
தவறும் காலங்கள்
என்னை தறுதலையாய்
செய்தாலும் ...

உன் தனையனாய்
உன் அன்பின் அணைப்போடு
தவறாமல் இருப்பேன் ...