Wednesday 30 September 2015

பண்பட்ட பண்பாடு

கற்காலம் முதல் 
கணிபொறி காலம்வரை 
மனித பண்பு வளர்ந்தது 
நொடிக்கொரு  வளர்ச்சியாய்...

பண்பாடோ போனது 
பாழ் பட்ட இருளினில் 

எண்ணிடா அறிவுடையோர் 
எம் நாட்டில் இருந்தாலும் 
பண்பிலா பல பெரும் 
பார்க்கின்றோம் பல இடத்தில்.

நெறியோடு அறிவிலும் 
நாம் அடைந்த வெற்றிக்கெல்லாம் 
நம் உணர்வோடும் ஒன்றிட்ட 
பண்பாடே காரணம் ..

பெண்ணின் பெருமையை 
பேணி நாம் காத்தது தான் 
நம் பெண் இன்று 
விண் செல்ல விதையாய் நின்றது ...

கண்ணென நாம் காத்த
பண்பாட்டு  நெறி இன்று 
பல நாட்டின் கண் நம் மேல் 
படும் நிலையை செய்தது 

பல புகழ் தந்த 
பண்பாட்டை பேணிடுவோம் 
பண்போடும் அன்போடும் 
பல ஆண்டு புகழ் பெறுவோம் 

2 comments:

  1. தங்களின் வருகையை தென்றலில் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி ......உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

      Delete